Welcome

Anti Essays offers essay examples to help students with their essay writing.

Sign Up

Tamil Essay

  • Submitted by: duraisamy
  • on June 22, 2014
  • Category: Social Issues
  • Length: 676 words

Open Document

Below is an essay on "Tamil" from Anti Essays, your source for research papers, essays, and term paper examples.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோலாகல துவக்கம் ! ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் துவக்கவுரை
 June 23rd, 2010 |  Author: Jupiter Web Soft Team
கோவை: பல மாதங்களாக முன்னேற்பாடுகள் பணிகள் துவக்கி அமர்க்களமான அரங்குகளுடன் உலகமே எதிர்பார்த்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் கோலாகலமாக துவங்கியது. 50 நாடுகளில் இருந்து தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கில் குவிந்திருப்பதால் கோவைநகரமே நிரம்பி ஸ்தம்பித்து இருக்கிறது.
இன்று காலை 10. 30 மணி அளவில் கொடிசியா அரங்கில் துவங்கிய மாநாட்டில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்னும் சில நிமிடங்களில் துவக்கவுரையாற்றுகிறார். இன்று முதல் 5 நாட்கள் நடக்கும் மாநாட்டில் ஆய்வரங்கம், கவியரங்கம், கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள், என கண்ணுக்கும், செவிக்கும் விருந்தாக அமைகிறது. 10.25 மணி் அளவில் முதல்வர் கருணாநிதி வந்தார். இவருடன் நிதி அமைச்சர் அன்பழகனும் வந்தார். மேடையில் அமர்ந்து இருந்த தமிழறிஞர்களை அன்பழகன் கைகுலுக்கி வரவேற்றார். சரியாக 10 . 30 மணி அளவில் தேசிய கீதத்துடன் துவங்கியது. சீர்காழி சிவ.சிதம்பரம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். மாநாடு இனித‌ே துவங்கியது. தொடர்ந்து துணை முதல்வர் மு.க., ஸ்டாலி்ன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்க வேண்டும்.
தமிழ் மொழி மீது காந்தி ஏக்கம்; ஜி.யு., போப் கவலை ; ஸ்டாலின் வரவேற்புரை: விழாவில் காலை 10 .38 க்கு துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். அவரது வரவேற்புரையில் ; தமிழ்மக்களின் அன்பான வரவேற்பை ஏற்று வந்திருக்கும் திருமதி ஜனாதிபதி பிரதீபா பாட்டிலை முதல் பெண் ஜனாதிபதியாக்கிட கலைஞர் சூளுரை ஏற்றதை இப்போது நினைவு கூர்ந்து தங்களை வரவேற்கிறேன். தமிழர்ககளின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ள முதல்வர் கருணாநிதியை வரவேற்கிறேன். தலைவர் கலைஞரோடு இணைந்து பணியாற்றும் நிதிஅமைச்சர் அன்பழகன், மத்திய, மாநில அமைச்சர்கள், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி, பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலா, மாநாட்டின் பல்வேறு ஒருங்கிணைப்பாளர்கள், அதிகாரிகள், ஆசிரிய பெருமக்கள், லட்சோப லட்சம் தமிழ்மக்கள் ஆகியோரை வரவேற்கிறேன்.
தமிழ், தென்தமிழ், இன்மைதமிழ், தூய்மைதமிழ், வாய்மை தமிழ், தொன்மைதமிழ் , நற்றமிழ்,...

Show More


Citations

MLA Citation

"Tamil". Anti Essays. 17 Dec. 2018

<http://parimatchstavki7.com/free-essays/Tamil-634106.html>

APA Citation

Tamil. Anti Essays. Retrieved December 17, 2018, from the World Wide Web: http://parimatchstavki7.com/free-essays/Tamil-634106.html